செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளுக்கான போக்குவரத்து வசதிகளும் கையாளுதலும்

ஆடுகளை பிடித்தல் மற்றும் கையாளுதல்

  • ஆடுகளுக்கு  தீவனமளித்து அவைகளை பிடிப்பதே, மிகவும்  சுலபமான வழியாகும்.
  • இவ்வாறு பிடிக்க இயலவில்லையெனில், ஆடுகளை மந்தையாக கொட்டகை அல்லது சுற்றி வளைத்தோ பிடிக்கலாம்.
  • இவ்வாறு சுற்றி வளைத்த பின்னர் ஆடுகளின் பக்கவாட்டில் சென்று, அவைகளின் கொம்பு, கழுத்து, அல்லது கால்களை இலாவகமாக பிடிக்கலாம்.
  • ஆடுகளின் பின்னங்கால்களை மெதுவாக பிடித்து அவைகளின் வயிற்றுப் பகுதியில் கை வைத்து அவைகளை உட்காரும் நிலையில் கையாளலாம்.
  • பொதுவாக, தனியான ஆட்டினை பிடிப்பதைக் காட்டிலும் ஆட்டுமந்தையாக  இருக்கும் போது  பிடிப்பதே சுலபமானது.
  • கொட்டகையில் தனியாக இருக்கும் குட்டிகள் எப்பொழுதும் பயந்த நிலையுடன் காணப்பட்டும். பக்கவாட்டு கம்பிகளில் முட்டி காயப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
  • ஆடுகளை பிடிப்பவர் வலது கை பழக்கமுடையவரானால், ஆட்டின் வலது  முதுகு புறத்தில்  உள்ள தொங்கும் தோலினை பிடித்தலே சிறந்தது.  தோலை நன்கு பிடித்து ஆடுகளை முன்பக்கமாக எளிதில் தூக்கலாம்.
  • ஆட்டின் தாடைப்பகுதியின் அடியில் உள்ள தோலினை ஒரு கையாலும் மற்றொரு கையை உடம்பின் அடிப்பாகத்திலும் பிடித்து ஆடுகளை நகர்த்தி செய்ய இயலும்.
  • குட்டியுடன் உள்ள பெட்டை ஆடுகளை நகர்த்த,  குட்டிகளை நாம் தூக்கி சென்றால் தாய் ஆடுகள் நம் பின்னர் எளிதில் வரும்.
  • ஆடுகளுக்கான போக்குவரத்து வசதி
  • தொற்று மற்றும் நச்சுயிரி நோய்கள் ஏதும் இல்லை என்ற உடல்நிலை மருத்துவ சான்றிதழ் இருந்தால்  மட்டுமே ஆடுகள் வண்டிகளில் எடுத்து செல்ல இயலும்.
  • ஆடுகளை வண்டிகளில் கொண்டு செல்லும் பொழுது, முதலுதவி பெட்டி வண்டியில் வைத்திருப்பது அவசியம். ஓரே தடுப்பில் கிடா மற்றும் பெட்டை ஆடுகளை வைத்து எடுத்துச் செல்லுதல் கூடாது.
  • நோய் ஏதும் இல்லாமல், நல்ல ஆரோக்கியமான கால்நடைகளை வண்டிகளில் எடுத்துச் செல்லுதல் வேண்டும்.
  • கால்நடைகள் ஒன்றோடொன்று  மிதித்து சேதம் ஏற்படாமல் இருக்க செம்மறியாடு மற்றும் வெள்ளாடுகளை கலந்து எடுத்துச் செல்லக் கூடாது.
  • குட்டி ஈன்ற ஆடுகள் மற்றும் சினை ஆடுகள் மிதிபடாமல் தவிர்க்க அவைகளை தனித்தனியாக கொண்டு செல்ல வேண்டும்.
  • நோய் வாய்ப்பட்ட இடங்களிலிருந்து நோய் தாக்காத இடங்களுக்கு ஆடுகளை எடுத்துச் செல்லும் பொழுது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
  • ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்வதற்கு 14 நாட்கள் முன்னரே ஆடுகளுக்கு தேவையான தடுப்பூசி அளித்தல் அவசியம்.
  • ஓரே தடுப்பறையில் கிடாக்களையும் பெட்டை ஆடுகளையும் கலந்து எடுத்துச் செல்லுதல் (பயணித்தல் கூடாது).
  • பயணத்தின் போது கால்நடைகளுடன் தேவையான முதலுதவி சாதனங்களை எடுத்துச் செல்லுதல் நல்லது.
  • பயணத்தின் போது, அப்பயணம் முழுமைக்கும் தேவையான பசுந்தீவனம் மற்றும் அடர்தீவனம் எடுத்துச் செல்லுதல் வேண்டும்.
  • கால்நடைகளை வண்டிகளில் ஏற்றுவதற்கு முன் வண்டி சுத்தமானதாகவும். பாதுகாப்பானதாகவும் பயணத்திற்கு ஏற்றதாக உள்ளதா என ஆய்வு செய்தல் வேண்டும்.
  • கால்நடைகளுக்கு காயம் ஏற்படாமல்  இருக்க தரை மற்றம் சுவர் பகுதி பழுதடையாமலும்,  கூர்மையான ஆணி, மற்றும் பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுதல் நல்லது.
  • கால்நடைகள் கீழே உட்காரும் பொழுது, அடிபடாமலிருக்க, வைக்கோல் மற்றும் படுக்கைக்கு உகந்த பொருட்களை தரையில் வைத்தல் நல்லது. இந்த  படுக்கை 5 செ.மீ. க்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • கால்நடைகள் வண்டியிலிருந்து குதித்து விடும் என்ற இடர்பாடு  இருந்தாலொழிய அவைகளை கட்டுதல் கூடாது.
  • ஒவ்வொரு வண்டியிலும் அவைகளை பாதுகாப்பாக அழைத்துச் செல்ல கீழ்வரும் பொருட்களுக்கான குறிப்பேட்டை உடன் வைத்திருத்தல் அவசியம்.
  • கால்நடைகளை பெறுபவரின் பெயர்,  முகவரி மற்றும் தொலைபேசி எண்.
  • கால்நடைகளை அனுப்புபவரின் பெயர், முகவரி மற்று தொலைபேசி எண்.
  • கால்நடைகளுக்கு வண்டியில்  வைக்கப்பட்டுள்ள  தீனங்களின் அளவு.
  • போதுமான காற்றோட்ட வசதி.
  • போக்குவரத்தின் நேரம் 12 மணி நேரத்திற்கு மேல் இருப்பின், ஒரு பணியாள் வண்டிகளில் இருத்தல் நல்லது.
  • வண்டிகள் நகரும் பொழுது, ஆடுகள் உட்காராமல் பார்த்துக் கொள்வதுடன், ஒவ்வொரு மணி நேரத்திற்கும் அவைகளுக்கு குடிநீர் வழங்க வேண்டும்.
  • கால்நடைகளை ஏற்றுதல்
  • அதிக வெப்பமுள்ள காலை நேரங்களிலோ அல்லது குளிராக உள்ள இரவு நேரத்திலோ கால்நடைகளை வண்டிளில் ஏற்றக்கூடாது.
  • கால்நடைகளை ஏற்றுவதற்கு மற்றும் இறக்குவதற்கு தேவையான சாய்வு பலகைகள் வண்டியில் இருத்தல் நல்லது. சாய்வு பலகையானது 0.75 மீட்டர் அகலமும், 0.75 மீட்டர் நீளமுமாக இருத்தல் வேண்டும்.
  • சாய்வு பலகையில் தரையமைப்பானது 15செ.மீ. இடைவெளி கொண்ட பலகைகளாக இருப்பின் ஆடுகள் ஏறுவதற்கு மற்றும் இறங்குவதற்கு எளிதாக அமையும்.
  • இரயில் வண்டிகளில் கால்நடைகளை அனுப்பும் தருவாயில், பிரிக்கப்பட்ட வண்டியின் கதவை சாய்வு பலகையாக ஆடுகளை ஏற்றுவதற்கு பயன்படுத்தலாம். அச்சமயங்களில் சாய்வு பலகையின் இரு பக்கங்களிலும் வைக்கோல் போர் கொண்டு அடுக்க வேண்டும்.

இடவசதி

  • கம்பள செம்மறியாடுகளுக்கு தேவையான இடவசதியே வெள்ளாடுகளுக்கு போதுமானது. இரயில் வண்டி அல்லது சரக்கு வண்டியில் ஒரு ஆட்டிற்கு தேவையான இடவசதி பின்வருமாறு,

கால்நடைகளின் எடை (கிலோ கிராம்)

இடவசதி (சதுர மீட்டர்)

கம்பள ஆடுகள்

சாதா ஆடுகள்

20 கிலோ வரை

0.18

0.16

21 முதல் 25  கிலோ

0.20

0.18

26 முதல் 30 கிலோ

0.23

0.22

30 கிலோவிற்கு மேல்

0.28

0.26

  • வண்டிகளில் தேவைக்கு அதிகமான ஆடுகளை ஏற்றக் கூடாது.
  • மலைப்பிரதேசங்களில் பயணிக்க வேண்டியிருந்தால், வண்டிகளில் தேவையான தடுப்புகள் அவசியம்.
  • இரயில் வண்டிகளில் பயணிக்கும் பொழுது, கீழ்க்கண்ட இடவசதிகள் ஆடுகளுக்கு அவசியம்.

இருப்புப் பாதை

இரயில் பெட்டியின் பரப்பளவு

எண்ணிக்கை

அகலப் பாதை

21.2 சதுர மீட்டருக்கு குறைவாக

70

21.2 சதுர மீட்டருக்கு மேல்

100

சாதாரணப் பாதை

12.5 சதுர மீட்டருக்கு குறைவாக

50

12.5 சதுர மீட்டருக்கு மேல்

60

குறுகிய பாதை

-

25

  • ஆடுகள் நெருக்கமாக நசுக்கப்படாமலிருக்க ஒவ்வொரு 2.3 மீட்டர் அகலத்திற்கும் தடுப்பு வசதிகள் பெரிய சரக்கு வண்டிகள் மற்றும் இரயில் பெட்டிகளில் இருத்தல் நல்லது.
  • 6 வாரத்திற்கு கீழ் உள்ள செம்மறியாட்டு குட்டிகளுக்கு, பெரிய ஆடுகளுக்கு தனித்தனி அறைகளில் கொண்டு செல்ல வேண்டும்.
  • ஆடுகள் குலுங்காமல் பயணிக்க, வண்டியின் வேகம் 40 கிலோ மீட்டருக்கு மிகாமல் இருத்தல் அவசியம். ஆடுகள் ஏற்றி செல்லும் வண்டிகளில் பிற சந்தை பொருட்களை கொண்டு செல்லுதல் கூடாது. மேலும் சாலையில் செல்லும் பொழுது அடிக்கடி நின்று செல்லக் கூடாது.